Header Ads

சிங்களவர்கள் இணைந்து சஜித்தை தோற்கடிக்க வேண்டுமாம்





தமிழ் தேசிய கூட்டமைப்பு சஜித் பிரேமதாசவுக்கோ அல்லது வேறு எவருக்கோ உடன்பட முடியாத யோசனைகளை முன்வைத்துள்ளது.

இதுபோன்றை அடிப்படைவாத இடத்திற்கு தமிழ் சேிய கூட்டமைப்பு தள்ளப்பட்டுள்ளதை நினைத்து நாம் வருத்தப்படுகின்றோம்.

இந்த யோசனைகளுக்கு யாராவது அடிபணிந்து போனால், சிங்களவர்கள் பிளவுபடாமல் ஒன்றிணைந்து வாக்குகளை பயன்படுத்த வேண்டும் என்று அத்துரலிய ரத்ன தேரர் கூறியுள்ளார்.

கொலொன்ன சூரியகந்த உட்சவ அரங்கில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் இங்கு மேலும் கருத்து வௌியிடும் போது,

சஜீத் பிரேமதாச இந்த அடிப்படைவாத யோசனைகளுக்கு இணங்கினால், கட்சி நிறம் பேதம் பார்க்காமல் சிங்களவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பொது வேட்பாளர் என்று நினைத்து கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாக்களிக்க வேண்டும்.

நான் நினைக்கின்றேன் கோட்டாபய ராஜபக்ஷ இந்த தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகமாகவே இருக்கிறது என்று. இவ்வாறு அவர் அங்கு உரையாற்றியுள்ளார்.
Powered by Blogger.