ராஜபக்ஷக்களின் பைல்களை மறைத்தது மைத்திரியே; சுதந்திர கட்சி மீது பேராசை
ராஜபக்ஷக்களுக்கு எதிராக இருந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்க முடியாமல் போனமைக்கு காரணம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலையீடு என்று பாராளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திர கூறியுள்ளார்.
அத்துருகிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இதனைக் கூறியுள்ளார்.
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் பதவி கிடைத்த உடனேயே மைத்திரிபால சிறிசேன ராஜபவக்களின் குற்றச்சாட்டுக்களை மூடி மறைக்க நடவடிக்கை எடுத்ததாக அவர் கூறியுள்ளார்.
வழக்குகள் பிற்போடப்பட்டமை மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் மௌனித்து இருந்தமை ஆகியவையும் ஜனாதிபதியின் அந்த செயற்பாட்டின் ஒரு பகுதியே என்று அவர் கூறியுள்ளார்.
அன்று சோபித தேரரின் கால்களைத் தாட்டு கும்மிட்டு ஒரு பக்கச்சார்பற்ற ஜனாதிபதியாக செயற்படுவதாக கூறிய போதிலும் ஜனாதிபதியான உடனேயே சுதந்திர கட்சி மீது பேராசை பிடித்ததாக
ஹிருனிகா பிரேமசந்திர கூறியுள்ளார்.

Post a Comment