Header Ads

வவுனியாவில் இரண்டு குழந்தைகளையும் கிணற்றில் வீசிவிட்டு தற்கொலைக்கு முயற்சித்த தாய்



வவுனியா, நெடுங்கேனி பகுதியில் தாய் ஒருவர் தனது இரண்டு பிள்ளைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இதன்போது தாய் உயிர் தப்பியுள்ளதுடன் பிள்ளைகள் இருவரும் உயிலிழந்துள்ளனர்.

வவுனியா, நெடுங்கேனி பண்டிக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

சம்பவத்தில் 4 வயதான உதயகுமார் சந்து மற்றும் இரண்டரை வயதான உதயகுமார் பவிந்திரன் என்பவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இதன்போது காப்பற்றப்பட்ட குறித்த பிள்ளைகளின் தாயான கந்தையா ஊர்வசி வவுனியா வைத்தியாசலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

சம்பவம் தொடர்பில் நெடுங்கேனி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




Powered by Blogger.