சந்திரிகாவும் குமார வெல்கமவும் இணைந்து போட்டுள்ள புதுத் திட்டம்
பிளவுபட்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை மீளவும் கட்டியெழுப்பும் தீவிர நடவடிக்கையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க ஈடுபட்டுள்ளார்.
இதற்கமைவாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம ஆகியோர் இணைந்து மாநாடு ஒன்றை நடத்துவதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.
எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் வாரத்தில் கொழும்பு, சுகததாஸ உள்ளகரங்கில் இந்த மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், கட்சி உறுப்பினர்கள் உட்பட பாரிய அளவிலானோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கருத்தினை கண்டுக்கொள்ளாமல் அதன் நாடாளுமன்ற உறுப்பினர், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைவதற்கு தீர்மானித்தனர்.
இந்த தீர்மானத்திற்கு மத்தியில் கட்சியினராக எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எடுக்க கூடிய மாற்று தீர்மானத்தை சமர்ப்பிப்பதற்காக இந்த மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

Post a Comment