ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பாதுகாக்க செய்ய வேண்டியது
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பாதுகாக்க வேண்டும் என்றால் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் அன்னப்பட்சிக்கு வாக்களிக்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் விஜித் விஜயமுனி டி சொய்சா தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அன்னப்பட்சிக்கு வாக்களிப்பதற்கு சுதந்திரக் கட்சியின் ஆதரவாளர்களுக்கு எவ்வித தடையும் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கோ அல்லது ஜே.வி.பிக்கோ ஆதரவளிக்க மாட்டார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்பொழுது சுதந்திரக் கட்சி கிடையாது என்ற போதிலும் கட்சியின் ஆதரவாளர்கள் இருக்கின்றார்கள் எனவும் அவர்களை பாதுகாக்க தாம் நடவடிக்கை எடுக்கப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
எமது கட்சியின் பொதுச் செயலாளரை ஜனாதிபதியாக நியமித்த பெருமை ஐக்கிய தேசியக் கட்சியை சாரும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Post a Comment