Header Ads

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்கான நேரத்தில் மாற்றம்



எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் போது வாக்களிப்பு நேரத்தை 1 மணித்தியாலத்தினால் நீடிக்க தேர்தல் ஆணைக்குழு முன்வைத்த யோசனைக்கு அரசியல் கட்சிகள் ஒப்புதல் அளித்துள்ளன.

தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இடையே இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது மேற்படி விடயம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் போது மு.ப 7 மணி தொடக்கம் பி.ப 5 மணிவரை மேற்படி வாக்காளர்களுக்கு வாக்களிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Powered by Blogger.