ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் மீண்டும் ஆட்சி மாற்றம்?
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக அல்லது பிற்பாடு ஆட்சி மாற்றம் ஒன்றை கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கள ஊடகம் ஒன்று இவ்வாறு செய்தி வௌியிட்டுள்ளது.
அதேவேளை ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ வெற்றி பெற்றால், அன்றைய தினமே மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமிக்கப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் அதற்கு முன்னரே பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியை கைப்பற்றுவத்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment