Header Ads

லண்டனில் கைது செய்யப்பட்ட நான்கு இலங்கையர்களும் விடுதலை

லண்டனில் 4 இலங்கையர்கள் கைது
லண்டன் லூட்டன் விமான நிலையத்தில் வைத்து செய்யப்பட்ட நிலையில், தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த அனைவரும் நேற்று பிணையில் விடுவிக்கப்பட்டதாக, மெட்ரோ பொலிட்டன் பொலிஸாரின் இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் லண்டன் லூட்டன் விமான நிலையத்தில் வைத்து பெண் ஒருவர் உள்ளிட்ட இலங்கையர்கள் நால்வர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

எனினும், கைது செய்யப்பட்ட பெண் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்த நிலையில், ஏனைய மூவரும் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாவும், அவர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகள் எதிர்வரும் நவம்பவர் மாதம் முதல் மேற்கொள்ளப்படும் எனவும் மெட்ரோ பொலிட்டன் பொலிஸாரின் இணையத்தளத்தில் கூறப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.