Header Ads

சுப்ரமணியன் சுவாமி இலங்கை தமிழர்களுக்கு வழங்கியுள்ள வாக்குறுதி


இலங்கைத் தமிழர்கள், கோத்தபாயவை ஜனாதிபதியாக தெரிவு செய்தால் அவருடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டு இந்திய அரசியலமைப்பு திருத்த சட்டத்தில் காணப்படும் மாநிலங்களுக்கான அனைத்து அதிகாரங்களையும் இலங்கையில் அமுல்படுத்த தாம் முன்னோடியாக செயற்படுவதாக இந்திய பாரதிய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவரான சுப்ரமணியன் சுவாமி தெரிவித்தார்.

உள்நாட்டு ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தமிழ் மக்கள் கோத்தபாயவிற்கே வாக்களிக்க வேண்டும். சிறிய பிரச்சினைகள் ஏதாவது இருந்திருக்கலாம்.

ஆனால் தமிழர்களின் பிரச்சினைகளை தீர்க்க கூடிய ஆளுமை ராஜபக்சர்களுக்கே உள்ளது.

எனவே அவர்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு சிறந்த தீர்வினை பெற்றுக் கொள்ள முடியும் என சுட்டிக்காட்டினார்.

No comments

Powered by Blogger.