Header Ads

அமைச்சரவைக் கூட்டத்தை திடீரென பிற்போட்ட ஜனாதிபதி

இன்று (09) இடம்பெறவிருந்த அமைச்சரவை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வாரத்தின் ஒவ்வொரு செவ்வாய் கிழமையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அமைச்சரவை கூட்டம் இடம்பெறும்.

எவ்வாறாயினும், இன்று முற்பகல் அமைச்சரவை கூட்டம் இடம்பெறவில்லை என தெரிவிக்கப்படும் நிலையில், இது தொடர்பில் எமது செய்திப்பிரிவு அமைச்சரவை செயலகத்தின் பேச்சாளர் ஒருவரை தொடர்பு கொண்டு வினவியிருந்தார்.

இவ்வாரத்திற்கான அமைச்சரவை கூட்டத்தை நாளை (09) இரவு 07.00 மணிக்கு நடாத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளதாக அவர் இதன்போது தெரிவித்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.