Header Ads

கோட்டாபய ராஜபக்ஷ ஊடகவியலாளர்களை சந்திக்காமல் இருப்பது ஏன்?


கோட்டாபய ராஜபக்ஷ ஊடகவியலாளர்கள் முன்னிலையில் பேசினால், அவர்களுடைய தேர்தல் திட்டம் முழுமையாக சிதைந்துவிடும் என்பதாலேயே ஊடக சந்திப்புக்களை அவர்கள் நடத்தவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

ஐ.தே.க.வின் தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதனிடையே, சஜித் பிரேமதாச பல்வேறு ஊடகவியலாளர் சந்திப்புக்களை நடத்தியதுடன், செய்தியாளர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்திருக்கிறார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கோட்டாபாய ராஜபக்ஷ தான் ஆட்சிக்கு வந்தால் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் இராணுவத்தினர் அனைவரையும் விடுதலை செய்வேன் என்று குறிப்பிட்டார்.

நீதிமன்றத்தின் முன்னிலையில் நிறுத்தப்பட்டு, குற்றவாளிகள் என்று தீர்மானிக்கப்பட்டவர்களை விடுதலை செய்வதாகவே அவர் கூறுகின்றார்.

எனவே நீதிமன்றம் முழுமையாக அவருடைய ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவரப்படும் என்பதையே அவர் இக்கருத்தின் ஊடாக வெளிப்படுத்தியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Powered by Blogger.