இலங்கை பௌத்த கேந்திர நிலையமாக மாற்றப்படும்
பௌத்த கேந்திர மத்திய நிலையமாக இலங்கையை மாற்றப் போவதாக ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் பௌத்த மகா சங்கத்தினருடன் மேற்கொண்ட சந்திப்பின் போது அவர் இக்கருத்தை வெளியிட்டார். இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,
சர்வதேச பௌத்த பல்கலைக்கழகமொன்றை இந்நாட்டில் உருவாக்கி, பிராந்தியத்தின் பௌத்த கேந்திர மத்திய நிலையமாக இலங்கையை மாற்ற திட்டமிட்டுள்ளேன்.
எமது நாட்டிலுள்ள புராதன சின்னங்களை பாதுகாப்பதற்கு நிலையான வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment