தனது தேர்தல் பணிகளில் இருந்து சஜித் விலக்கிய இந்தியர்களுக்கு ரணில் வேலை கொடுத்தது ஏன்?
தனது பிரச்சார நடவடிக்கை தொடர்பாக வொக்சல் வீதி (vauxhall street) காரியாலயத்தில் பணியாற்றிய இந்தியர்கள் சிலரை சஜித் பிரேமதாச கடந்த வாரத்தில் பணியில் இருந்து நீக்கியதுடன், பிரதமர் ரணில் விக்ரமசிங்க உடனடியாக அவர்களை சேவையில் இணைத்துள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த இந்தியர்களின் செயல்திறன் மிகவும் மோசமாக உள்ளது என்பதை தொடர்ந்து கவனித்ததன் காரணமாக அவர்களை சஜித் பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளார்.
அத்தகைய நபர்களை ரணில் விக்ரமசிங்கவினால் மீண்டும் சேவையில் இணைத்துக்கொண்டமை தொடர்பாக UNPயினுள் இரண்டு கருத்துக்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
ஒரு தரப்பினர் இதை காலை வாருவது என கூறுவதுடன், மற்றைய தரப்பு தனது பிரச்சார நடவடிக்கைகளின் அனைத்து ரகசியங்களையும் அறிந்த நபர்களை இறுதி நேரத்தில் எதிர்க்கட்சியின் கைகளில் ஒப்படைப்பதை தடுப்பதற்காக பிரதமரினால் அடுத்த வாரத்திற்காகவும், அவர்கள் சேவையில் தக்கவைக்கப்பட்டுள்ளனர்.

Post a Comment