Header Ads

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று பணிகளை ஆரம்பிக்கிறார்





புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள கோட்டபய ராஜபக்ஸ இன்று (19) தனது பணிகளை உத்தியோகப்பூர்வமாக ஆரம்பிக்கவுள்ளார்.

அதற்கமைய அவர் இன்று ஜனாதிபதி செயலகத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்ற உள்ளார்.

புதிய ஜனாதிபதியின் செயலாளராக பீ.பி.ஜயசுந்தர தெரிவு செய்யப்படவுள்ள நிலையில், புதிய பாதுகாப்புச் செயலாளராக
மேஜர் ஜெனரல் கமல் குணரத்ண தெரிவு செய்யப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி தனது கடமைகளை ஏற்றுக்கொண்டதன் பின்னர் இந்த நியமனங்கள் வழங்கப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

Powered by Blogger.