Header Ads

கூட்டு எதிர்க்கட்சியின் விஷேட கூட்டம் இன்று - முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படலாம்





கூட்டு எதிரணியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களுக்கு இடையிலான கூட்டம் ஒன்று இன்று (19) இடம்பெறவுள்ளது.

இந்த கலந்துரையாடல் எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸவின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இன்றிரவு 7 மணியளவில் இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவும் இந்த கலந்துரையாடலில் பங்கேற்கவுள்ளார்.

இதன்போது கூட்டு எதிரணி எதிர்காலத்தில் செயற்பட வேண்டிய விதம் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட உள்ளது.

அதேபோல் புதிய அரசாங்கம் ஒன்றை அமைப்பது குறித்தும், பாராளுமன்றத்தை கலைப்பது குறித்தும் இதன்
போது கலந்துரையாடப்படவுள்ளதுடன் முக்கிய தீர்மானங்களும் எடுக்கப்பட உள்ளன.

ஜனாதிபதி தேர்தலின் பின்னர் கூட்டு எதிரணியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களுக்கு இடையில் நடைபெறும் முதலாவது கூட்டமாக இது கருதப்படுகின்றது.


Powered by Blogger.