Header Ads

தனது அரசாங்கத்திற்கே பெரும்பான்மை - நாளை ஜனாதிபதிக்கு அறிவிப்பேன்



ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுக்கு அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கான சந்தர்ப்பத்தை வழங்கி தான் வகித்த பிரதமர் பதவியை இராஜினாமா செய்வதாக ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பிரதமர் பதவியில் இருந்து விலகுவது தொடர்பில் நாளைய தினமே ஜனாதிபதியிடம் அறிவிக்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

தனது பதவி விலகல் தொடர்பில் ஊடகங்களுக்கு அவர் விடுத்துள்ள விசேட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.




ஜனநாயகத்திற்கு மதிப்பளித்தே தான் பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ள அவர், தனது அரசாங்கத்திற்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் காணப்பட்ட நிலையிலும் நாட்டின் நன்மைக்காக இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக கூறியுள்ளார்.

தனது ஆட்சியில் 19 ஆவது திருத்தச்சட்டத்தை ஏற்படுத்தி அதன் மூலம் அனைத்து அரச நிறுவனங்களிலும் காணப்பட்ட அரசியல் தலையீட்டை இல்லாது செய்தாகவும், அதன் மூலம் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலை
நீதியாகவும், சுதந்திரமாகவும் நடத்த வாய்பேற்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தனது ஆட்சியில் ஜனநாயகம், மனித சுதந்திரம், கருத்துச் சுதந்திரம், தகவல் அறியும் உரிமை, நல்லிணக்கம் போன்றவற்றை உறுதிப்படுத்தியதாகவும் நிலையான அபிவிருத்தியை
புதிய பாதைக்கு இட்டுச்சென்றதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Powered by Blogger.