மூன்று மாவட்டங்களின் தேர்தல் முடிவுகள் தாமதமாகலாம்
இரத்தினபுரி, கேகாலை மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களின் தேர்தல் முடிவுகளை வௌியிடுவதில் தாமதம் ஏற்படலாம் என்று தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேஷப்பிரிய கூறியுள்ளார்.
அந்த மாவட்டங்களில் இன்று பெய்த கடும் மழை காரணமாக ஏற்பட்டுள்ள வௌ்ள நிலையால் வாக்குப் பெட்டிகளை கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டதே அதற்கு காரணம் என்று அவர் கூறியுள்ளார்.
பதுளையில் வாக்குகளை எண்ணும் நிலையத்துக்கு எடுத்துச்சென்ற வான் ஒன்று பள்ளத்தாக்கில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியது.
இன்று மாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தின்போது வான் சாரதி காயங்களுக்கு உள்ளானார்.
இந்த வான் பண்டாரவளை தமிழ் வித்தியாலயத்தில் இருந்து அம்பேதன்ன வாக்கு எண்ணும் நிலையத்துக்கு செல்லும் வழியிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
எனினும் காவல்துறையின் போக்குவரத்து பிரிவினர் வாக்குப்பெட்டிகளை உரியமுறையில் வாக்கு எண்ணும் நிலையத்துக்கு கொண்டு சேர்த்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment