மஹிந்தானந்த,ஜோன்ஸ்டன்,ரோஹித ஆகியோருக்கு அமைச்சுப் பதவிகள் இல்லை
நியமிக்கப்படவுள்ள புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை குழுக்களுக்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உயர் செயற்பாட்டாளர்களான மஹிந்தானந்த அலுத்கமகே, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் ரோஹித அபேகுணவர்தன ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்களை நியமிக்காது இருக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த அமைச்சர்களுக்கு எதிராக நிதி மோசடி குற்றச்சாட்டுக்கள் உள்ளதால் , அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களை நியமிப்பதில் ஆட்சேபனை தெரிவித்ததாக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Post a Comment