Header Ads

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கில் இருந்து விடுதலை





டீ.ஏ. ராஜபக்ஷ நினைவுத் தூபி மற்றும் நூதனசாலை அமைப்பதற்கு அரச நிதியைப் பயன்படுத்தியதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக கொழும்பு விசேட நீதாய மேல் நீதிமன்றில் வழக்கு இடம்பெற்று வந்தது.

குறித்த வழக்கு விசாரணைகள் சம்பத் அபயகோன், சம்பத் விஜயரத்ன மற்றும் சம்பா ஜானகீ ராஜரத்ன ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இடம்பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் குறித்த வழக்கில் இருந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடுதலை செய்யப்படுவதாக, கொழும்பு விசேட நீதாய மேல் நீதிமன்ற நீதிபதிகள் சற்று முன்னர் அறிவித்துள்ளனர்.

நீதிமன்றத்தின் பொறுப்பில் இருந்த அவரது கடவுச்சீட்டையும் விடுவிப்பதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Powered by Blogger.