Header Ads

கரு ஜயசூரியவின் சபாநாயகர் பதவி வாசுதேவவுக்கு?



கரு ஜயசூரியவை சபாநாயகர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு பாராளுமன்ற உறுப்பினர் வாசு தேவ நாணயக்காரவை சபாநாயகராக நியமிப்பதற்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்க்கப்படுகிறது.

சமீபத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் எம்.பி.க்களின் கூட்டத்தின் போது இது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


2018 அக்டோபர் ஆட்சி கவிழ்ப்பின் போது சபாநாயகராக கரு ஜயசூரியவின்  நேரடி மற்றும் முறையற்ற நடத்தை குறித்து மொட்டின் எம்.பி.க்கள் கோபமடைந்தார்கள் என்பது இரகசியமல்ல.

52 நாட்களில் அரசாங்கம் வீழ்ச்சியடைவதற்கு ஒரு முக்கிய காரணம் சபாநாயகரின் பங்கும் அதில் இருந்ததே. இதற்கமைய கிடைக்கும் முதல் சந்தர்ப்பத்திலேயே அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அரசியலமைப்பு சபையின் தலைவராக சபாநாயகருக்கு பெரும் அதிகாரம் இருப்பதால் அந்த பதவியை விரைவில் தங்கள் கட்சிக்கு பெறுவதன் முக்கியத்துவத்தையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

சபாநாயகரை நீக்கி புதிய சபாநாயகரை நியமிக்க வேண்டிய 113 எம்.பி.க்களின் ஆதரவைப் பெறுவது இந்த சந்தர்ப்பத்தில் கடினம் அல்ல.  எதிர்க்கட்சித் தலைவர் பதவியின் நெருக்கடி காரணமாக UNPயின் சஜித் பிரிவும் கரு ஜயசூரியவுடன் குழப்பத்தில் உள்ளதால் அவர்களின் ஆதரவையும் பெறலாம் என மொட்டின் எம்பிக்கள் சிலர் இதன்போது தெரிவித்துள்ளதாக தகவல்  வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Powered by Blogger.