Header Ads

புதிய அரசாங்கத்துடன் இணையத் தயாராகும் UNP எம்.பி.க்கள் குழு



எதிர்க்கட்சி எம்.பி.க்களின் ஒரு குழு தற்போதைய அரசாங்கத்திற்கு தேவையான பாராளுமன்ற பெரும்பான்மையைப் பெற ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  அவர்கள் இது தொடர்பாக அரச கட்சியின் எம்பிக்களின் மூலமாக அரசின் பிரதானிகளுக்கும் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் எதிர்க்கட்சி எம்பிக்களை அரசுடன் இணைத்துக்கொள்வதற்கு இதுவரை அரச கட்சி தலைவர்கள் எந்த முடிவும் எடுக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.

தற்போதைய அரசாங்கம் ஒரு இடைக்கால அரசாங்கமாக செயல்படுவதால், அரசாங்கத்தின் காலம் அதிகபட்சம் மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றது.

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அரசாங்கத்தில் இணைந்தாலும் எந்தவொரு சூழ்நிலையிலும் அமைச்சரவையை மேலும் அதிகரிக்காதிருப்பதற்கு அரசாங்கமும் ஜனாதிபதியும் முடிவு செய்துள்ளனர்.

தோட்ட துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் இரண்டு கட்சிகளும், UNP  எம்.பி.க்கள் குழுவும் அரசாங்கத்தில் இணைய தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Powered by Blogger.