மஹிந்த அரசாங்கத்துடன் இணையத் தயாராகும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள்
புதிய அரசாங்கத்திற்கு தேவையான நாடாளுமன்ற பெரும்பான்மையை முழுமைப்படுத்தி கொள்ள அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அணி ஒன்று தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இது குறித்து அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களுக்கு அறிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை அரசாங்கத்தில் இணைந்துக்கொள்வது தொடர்பாக ஆளும் கட்சியின் தலைவர்கள் இதுவரை எந்த தீர்மானத்தையும் எடுக்கவில்லை.
தற்போதைய அரசாங்கம் தற்காலிக பொறுப்பு அரசாங்கம் என்பதால், அது மூன்று அல்லது நான்கு மாதம் வரை ஆட்சியில் இருக்கும் என்பதால் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை பெறுவது தொடர்பாக பெரிதாக கவனம் செலுத்தவில்லை.
மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இரண்டு கட்சிகள் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் இவ்வாறு அரசாங்கத்திற்கு தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

Post a Comment