Header Ads

லொறியை முந்திச் செல்ல முட்பட்ட மோட்டார் சைக்கிள் சாரதி கொலை





கிரியுல்ல கடுகம்பம்பல பகுதியில் மனித கொலைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கிரியுல்ல பிரதான வீதியில் பயணித்த லொறி ஒன்றை பின்னால் பயணித்த மோட்டார் சைக்களில் ஒன்று முந்திச்செல்ல முற்பட்டுள்ளது.

அவ்வாறு பின்னாள் வந்த மோட்டார் சைக்கிள் லொறியின் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதனை அடுத்து லொறி சாரதிக்கும் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவருக்கும் இடையில் வாய்த்தர்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த வாய்த்தர்கம் கைகலப்பாக மாறிய நிலையில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் மீது லொறி சாரதியும் மற்றுமொருவரும் இணைந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இவ்வாறு பலத்தகாயங்களுக்கு உள்ளான அவர் தம்பதெனிய வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

19 வயதான கனிஸ்க தில்சான் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சடலம் தொடர்பான நீதவான் விசாரணை இன்று இடம்பெறவுள்ளது.

லொறியின் சாரதியும் அவரது உதவியாளரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் இருவரும் தந்தையும் மகனும் என தெரியவந்துள்ளதோடு அதில் தந்தை பன்னல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் கான்ஸ்டபிள் என தெரியவந்துள்ளது.

கிரியுள்ள பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுத்துள்ளனர்.

Powered by Blogger.