Header Ads

எதிர்வரும் நாட்களில் CID யில் ஏற்படவுள்ள அதிரடி மாற்றங்கள்

Many-changes-to-be-occurred-in-CID-

குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் பூரணமான மாற்றத்தை மேற்கொள்ள அரசு தீர்மானித்துள்ளது. இதற்கமைய எதிர்வரும் நாட்களில் CIDயில் புதிய நியமனங்கள் இடம்பெறவுள்ளது.


குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்குப் பொறுப்பான, சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர், ரவி செனவிரத்ன அடுத்த சில நாட்களில் ஒய்வு பெறவுள்ளதால் அவரை தொடர்ந்து அந்த பதவிக்கு பொருத்தமான அதிகாரியை நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஆட்சியின் போது ஏராளமான காவல்துறையின் உயர் அதிகாரிகள் பழிவாங்கலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் அது தொடர்பாக புகார்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அரச தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுவரை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி சானி அபேசேகர உள்ளிட்ட அதிகாரிகள் பலர் மாற்றப்பட்டுள்ளனர்.
Powered by Blogger.