Header Ads

ராஜிதவுக்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு


முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கு வெளிநாடு செல்ல கொழும்பு நீதவான் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.


இரகசியப் பொலிஸாரால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இதேவேளை முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தாக்கல் செய்த முன்பிணை மனு மீதான விசாரணையை எதிர்வரும் டிசம்பர் மாதம் 30ஆம் திகதி எடுத்து கொள்ள கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் தீமானித்துள்ளது.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் தன்னை கைது செய்வதற்கு தயாராக உள்ள நிலையில் , கைது செய்வதை தடுப்பதற்காக முன்பிணை கோரி முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன 2 முறை மனுக்களை தாக்கல் செய்திருந்தார்.

அவை நிராகரிக்கப்பட்டிருந்த நிலையில் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன மூன்றாவது முறையாக மேலுமொரு முன்பிணை மனுவை இன்றைய தினம் தாக்கல் செய்தார்.

அதனடிப்படையிலே குறித்த மனு மீதான விசாரணை எதிர்வரும் டிசம்பர் மாதம் 30ஆம் திகதி எடுத்து கொள்ள நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
Powered by Blogger.