வைத்தியர் ஷாபிக்கு எதிரான புதிய விசாரணை ஆரம்பம்
மருத்துவர் ஷாபிக்கு எதிரான புதிய விசாரணையை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் இன்று ஆரம்பித்துள்ளனர் .
அதனடிப்படையில் வைத்தியசாலை ஊழியர்களிடம் வாக்குமூலம் பெறும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் , பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் தாய்மாரிடமும் விசாரணைகள் நடத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை கடந்த ஆட்சியின்போது குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முறையான விசாரணைகளை நடாத்தவில்லையென ரதன தேரர் உட்பட்ட குழுவினர் குற்றஞ்சாட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment