சம்பிக்கவுக்கு எதிராக கொலைக் குற்றச்சாட்டு; மனைவியையும் விசாரிக்க கோரிக்கை
பிரகீத் எக்னெலிகொட சம்பவம் சிக்கலான கெலைச் சம்பவம் என்றும் அது தொடர்பில் முன்னாள் அமைச்சர் பாட்டளி சம்பிக ரணவக மீது குற்றம் சுமத்தி இரகசியாப் பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஓய்வு பெற்ற இராணுவ மேஜர் அஜித் பிரசன்னவால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் பாட்டளி சம்பிக ரணவகவின் மனைவியிடமும் வாக்குமூலம் பெற்றுக் கொள்ளும்படி தெரிவித்து இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பாட்டளி சம்பிக ரணவகவின் தகாத பாலியல் தொடர்பு சம்பந்தமாக தகவல் வௌியிட்டதன் காரணமாக பிரகீத் எக்னெலிகொடவை கடத்தி காணாமல் ஆக்கியாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இது சம்பந்தமாக அப்போதைய பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மீது குற்றத்தை சுமத்துவதற்கு முயற்சி செய்யப்பட்டதற்கு சாட்சிகள் இருப்பதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Post a Comment