Header Ads

விகாரையில் பாதுகாப்பாக இருந்த மன்னர் காலத்து முத்துக்களை திருடிய பௌத்த பிக்கு


மாத்­தளை நாவுல பிர­தேச விஹாரை ஒன்­றி­லி­ருந்த மன்னர் காலத்து விலைமதிப்பற்ற கஜ­முத்­துக்கள் இரண்டைத் திருடி விற்­பனை செய்ய முயற்­சித்த பௌத்­த ­பிக்கு ஒருவர் உட்­பட ஐவரைக் கம்­பளை பிராந்தியத்துக்குப் பொறுப்பான விசேட அதி­ர­டிப்­ப­டை­யினர் கைது செய்துள்ளனர்.


அதி­ர­டிப்­படை பிரிவின் உளவுப் பிரி­வுக்கு கிடைக்­கப்­பெற்ற இர­க­சியத் தகவல் ஒன்றின் அடிப்­ப­டையில் செவ்­வாய்க்­கி­ழமை இரவு கம்­பளை ஹெட்­காலை பிர­தே சத்தில் வைத்து சந்­தேக நபர்கள் பய­ணித்த முச்­சக்­கர வண்­டியை நிறுத்தி சோத னைக்கு உட்­ப­டுத்­தி­ய­போதே குறித்த கஜ முத்­துக்கள் இருப்­பது கண்டு பிடிக்கப்பட்டு கைப்­பற்­றப்­பட்­டன.
Links

இத­னை­ய­டுத்து முச்­சக்­கர வண்­டியில் பய­ணித்த பௌத்த பிக்கு உட்­பட ஐவரையும் அதி­ர­டிப்­ப­டை­யினர் கைது செய்­துள்­ள­துடன், சந்­தேக நபர்கள் பய­ணித்த முச்­சக்­கர வண்­டி­யையும் கைப்­பற்­றி­யுள்­ளனர்.

மேற்­கு­றிப்­பிட்ட விகா­ரையில் ‘தரந்­துவ’ எனப்­படும் பெட்­ட­கத்தில் மிகப் பாதுகாப்பாக வைக்­கப்­பட்­டி­ருந்த இது­வ­ரையில் விலை மதிக்க முடி­யாத கஜ­முத் துக்­க­ளையே நீண்­ட­நாட்களின் முன் இவர்கள் திரு­டி­யுள்­ள­மையும் விசாரணைகளி­லி­ருந்து தெரிய வந்­துள்­ளது.

இதன்­போது நாவு­ல­ பி­ர­தே­சத்தைச் சேர்ந்த பிக்கு உட்­பட இருவர் மெதிரிகிரியவைச் சேர்ந்த ஒருவர் கம்­பளை மீத்­த­லாவ மற்றும் கஹா­டப்­பிட்­டிய பிர­தே­சங்­களைச் சேர்ந்த இரு­வ­ரு­மாக ஐந்து பேரே கைதா­கி­­யுள்­ளனர்.

கைது செய்­யப்­பட்ட குறித்த சந்­தேக நபர்­களை கம்­பளைப் பொலி­ஸாரின் ஊடாக கம்பளை மாவட்ட நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அதிரடிப்படையினர் மேலும் தெரிவித்தனர்.
Powered by Blogger.