Header Ads

கட்சித் தலைவர் ரணில் சஜித்துக்கு வழங்க இணக்கம் தெரிவிப்பு - மகிழ்ச்சியில் சஜித்


எதிர்வரும் பொதுத் தேர்தலில் முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாஸ கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு அவகாசம் வழங்க ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இணக்கம் தெரிவித்துள்ளார்.


பிரதமர் வேட்பாளர் என்ற வகையில் நாடு முழுவதும் செல்ல வேண்டி ஏற்படுவதால் சிரமமின்றி வெற்றி பெறக் கூடிய மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு சஜித் பிரேமதாசவுக்கு அவகாசம் வழங்குவது தவறில்லை என்று ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் தான் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுவதாக இருந்தால் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஏற்படும் வெற்றிடத்திற்கு தான் பெயரிடும் ஒருவரே போட்டியிட வேண்டும் என்பது சஜித் பிரேமதாசவின் கோரிக்கையாக உள்ளது.

Powered by Blogger.