ஜனாதிபதி அலுவலகத்தால் பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு
ஜனாதிபதியுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாகக் கூறிக்கொண்டு மக்களை ஏமாற்றி வருவோர் தொடர்பாகத் தகவல்கள் தெரிந்தால் உடனடியாக பொலிஸாருக்கு அறிவிக்குமாறு ஜனாதிபதி அலுவலகம் கேட்டுக்கொள்கின்றது.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் ஆலோசகர் எனக் கூறிக்கொண்டு மொரட்டுவையிலுள்ள பிரபல பாடசாலையின் அதிபருக்கு அழுத்தம் கொடுத்த நபரொருவர் பற்றி அறியக்கிடைத்துள்ளது.
அவர் தொடர்பாகக் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினால் விசாரணைகள் ஆரம்பிக்கப் பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் அண்மையில் சில ஊடகங்களிலும் தகவல் கள் வெளியாகியிருந்தது.
இந்நிலையில், ஜனாதிபதியுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாகக் கூறிக்கொண்டு மக்களை ஏமாற்றி வருவோர் தொடர்பாகத் தகவல்கள் தெரிந்தால் உடனடியாக பொலிஸாருக்கு அறிவிக்குமாறு ஜனாதிபதி அலுவலகம் கேட்டுக்கொள்கின்றது.

Post a Comment