Header Ads

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு கடிதம் அனுப்பியுள்ள லண்டன் சிறுவன் அப்துல்லா

லண்டனை சேர்ந்த சிறுவனொருவர், இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்சவிற்கு கடிதமொன்றை எழுதியனுப்பியுள்ளார்.

குறித்த கடிதம் தொடர்பில் பிரதமர் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.

அதில்,

அப்துல்லா அபுபயிட் அனுப்பிய கடிதம் இன்று காலை எனக்கு கிடைத்தது. அந்த கடிதத்திற்காக அவருக்கு நான் நன்றி கூற விரும்புகிறேன்.

இந்த கடிதம் எனக்கு உந்துதல் மற்றும் ஊக்குவிப்பை அளித்துள்ளது.

மேலும் பழைய தலைமுறையினராகிய நாங்கள் எங்கள் இளைஞர்களிடம் வைத்திருக்கும் பொறுப்பையும் அது நினைவூட்டியது.

ஒரு நாள் உங்களை நேரில் சந்திப்பேன் என்று நம்புகிறேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.



Powered by Blogger.