Header Ads

பொதுத் தேர்தலில் மொட்டுச் சின்னம் இல்லை - கதிரை சின்னத்தில் போட்டி?

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்த அனைத்து கட்சிகளும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் மொட்டு சின்னத்தில் அல்ல, நாற்காலி சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று பாராளுமன்ற  உறுப்பினர் உதய கம்மன்பில வலியுறுத்தியுள்ளார்.


ஜனாதிபதி தேர்தலுக்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்த அனைத்து கட்சிகளும் அடுத்த பொது தேர்தலில் நாற்காலி சின்னத்தில் போட்டியிடுவதற்கு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக அவர் நினைவுபடுத்தியுள்ளார்.

எனவே பொதுத் தேர்தலுக்கு மொட்டு சின்னத்தில் போட்டியிடுவதாக கூறுவது குறித்த ஒப்பந்தம் தொடர்பாக அறியாதவர்கள் அல்லது பிற தனிப்பட்ட காரணங்களை கொண்டவர்கள் எனவும் தனது முகாமில் உள்ளவர்கள் மீது குற்றம்சாட்டியுள்ளார்.

இதற்கமைய இத்தகைய அறிக்கைகளைத் தவிர்ப்பதற்காக அந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நிபந்தனைகள் தொடர்பாக தமது கட்சி உறுப்பினர்களை அறிவுறுத்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

நேற்று (03) பிவிதுறு ஹெல உறுமயவின் கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில இதனை குறிப்பிட்டுள்ளார்.

Powered by Blogger.