Header Ads

ராஜிதவை கைது செய்வது பிரச்சினைக்குறியது


ஊடக சந்திப்பில் சொல்லப்பட்ட வெள்ளை வேன் தொடர்பாக விசாரணை செய்யாமல், அந்த சந்திப்பை ஏற்பாடு செய்த நபரை விசாரிப்பது பிரச்சினைக்குரியதாகும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார்.


ஐக்கிய தேசிய கட்சி இன்று கொழும்பில் நடத்திய ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

"வெள்ளை வேன் என்பது சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு ஆரம்பமான பிரச்சினை.

யாராவது வந்து அது தொடர்பாக தனக்கு தொடர்புள்ளது என்று கூறினால் அது பற்றி தேடிப்பார்க்க வேண்டும்.

ஊடக சந்திப்பை நடாத்திய அரசியல்வாதியை கைது செய்து பலன் இல்லை" என்று மேலும் தெரிவித்தார்.
Powered by Blogger.