தன்னை சுற்றி இருப்பவர்களின் தேவைக்காகவே தலைமை பதவியை ரணில் விட்டுக் கொடுப்பதில்லை
கட்சி தலைமை தொடர்பான பிரச்சினையை ஜனவரிக்குள் தீர்த்துக்கொண்டு ஒரு அணியாக பொதுத்தேர்தலுக்கு முகம்கொடுக்கவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துக்கோரள வலியுறுத்தியுள்ளார்.
இல்லாவிட்டால் அனைவரும் எதிர்பார்க்கும் மாற்றத்தை அடைந்துகொள்ள முடியாமல்போகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ரணில் விக்ரமசிங்க தன்னை சுற்றி இருப்பவர்களின் தேவைக்காகவே தலைமை பதவியை விட்டுக்கொடுக்காமல் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சி பொதுத் தேர்தலுக்கு மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Post a Comment