ராஜித இருக்கும் லங்கா ஹொஸ்பிடலில் CID - இன்னும் சற்று நேரத்தில் ராஜித கைது?
ராஜித சேனாரத்ன நாரஹேன்பிட்ட லங்கா ஹொஸ்பிடல் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவின் இல்லத்தில் இன்று (26) பிற்பகல் மீண்டும் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இந்நிலையிலேயே அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
தற்போது குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் ராஜித சேனாரத்ன அனுமதிக்கப்பட்டுள்ள லங்கா ஹொஸ்பிடலுக்கு சென்றுள்ளனர்.
குற்றப் புலனாய்வு அதிகாரிகள் தற்போது அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்து கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment