Header Ads

சிறைச்சாலைகளினால் போராட்டத்தை நிறுத்த முடியாது


நீதிமன்றத்தின் சுயாதீனத்தை சிலர் இல்லாமலாக்க முயற்சி செய்தாலும் அதனை பாதுகாப்பதற்காக நீதிமன்றம் நடவடிக்கை எடுத்தமை தொடர்பில் தான் நன்றி செலுத்துவதாக முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.


சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர் பிணையில் விடுதலை செய்யப்பட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தன்னை அரசியல் சூழ்ச்சியின் ஊடாக கைது செய்த சந்தர்ப்பத்தில் இருந்து தன்னை பார்ப்பதற்காக வருகை தந்த தேரர்களுக்கும் ஐக்கிய தேசிய கட்சி தலைவர் மற்றும் சஜித் பிரேமதாசவிற்கும் இந்த சந்தர்ப்பத்தில் நன்றி தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஜனநாயகம் மற்றும் சுதந்திரம் தொடர்பிலான போராட்டத்தை தொடர்வதாகவும் கைவிலங்கு மற்றும் சிறைச்சாலைகளினால் போராட்டத்தை நிறுத்த முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Powered by Blogger.