ராஜித சேனாரத்னவை கைது செய்ய உத்தரவு
கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் வௌ்ளைவேன் சம்பவம் தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடத்தியமை தொடர்பில் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை கைது செய்து நீதிமன்றறத்தால் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இரகசிய பொலிஸார் சார்ப்பில் முன்னிலையான அரசாங்க சொலிஸிஸ்டர் ஜெனரல் திலீப பீரிஸ் முன்வைத்த கருத்துக்களை அடிப்படையாக வைத்து இவ்வாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தாக்கல் செய்த முன்பிணை மனுவை டிசம்பர் மாதம் 30 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்து கொள்ள கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment