Header Ads

விபத்தின் பின்னர் சம்பிக பேசிய முதலாவது தொலைபேசி உரையாடல்


முன்னாள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க 2016 ஆம் ஆண்டு ராஜகிரியவில் வாகன விபத்து இடம்பெற்றதன் பின்னர் முதலாவது தொலைபேசி அழைப்பை அப்போதைய கொழும்புக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு எடுத்துள்ளார்.


அந்த அழைப்பு 161 செக்கன் வரை நீடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாகல்கந்தே சுதந்த தேரர் இந்த தகவலை வௌிப்படுத்தியுள்ளார்.

அன்றைய தினத்திற்குறிய அவர்களின் தொலைபேசி அழைப்பு தரவுகளை ஊடகங்களுக்கு வௌிப்படுத்தி நடத்திய ஊடக சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் தற்போதைய பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிடமும் வாக்குமூலம் பெறுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை கூறத்தக்கது.
Powered by Blogger.