அரசியல் ஓய்வு குறித்து ரணில் வௌியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு
எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் தமது 43 வருட அரசியல் வாழ்க்கைக்கு விடை கொடுப்பதாக ஐக்கிய
தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார் .
கொழும்பு மாளிகா கந்த மகாபோதி விகாரையில், விகாரதிபதியுடன் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி வெற்றி பெறுவதற்கு தாம் முன்னின்று செயல்படப் போவதாகவும் அதன் பின்னர் தமது அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment