Header Ads

குமார வெல்கம எதிர்க்கட்சியில் - UNPஇருவர் ஆளும்கட்சிக்கு


ஒத்திவைக்கப்பட்டிருக்கும் நாளாளுமன்றம் எதிர்வரும் ஜனவரி மாதம் 3ம் திகதி மீண்டும் கூடவுள்ள நிலையில் நாடாளுமன்றத்தின் புதிய கூட்டத்தொடரில் எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்த தாம் தீமானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.


எனவே தமக்கு எதிர்க்கட்சி தரப்பில் ஆசனமொன்றை ஒழுங்கு செய்யுமாறு அவர் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார் என சிங்கள ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரத்தன தேரர் மற்றும் வசந்த சேனநாயக்க ஆகியோர் எதிர்வரும் ஜனவரி மாதம் 3ம் திகதி நாடாளுமன்ற அமர்வின் போது அரச தரப்பில் அமர தீர்மானித்துள்ளனர்.
Powered by Blogger.