Header Ads

02 கோடி 20 இலட்சம் மாத வாடகை செலுத்தியுள்ள அமைச்சு - வௌிவந்த அதிர்ச்சி தகவல்

கடந்த அரசின் கீழ் கொள்ளுப்பிட்டியில் செயற்பட்ட விசேட பிரதேசங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு கூடுதலான மாத வாடகையில் இயங்கியமை சம்பந்தமாக ஜனாதிபதி செயலகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அறியமுடிந்தது.


மேற்படி அமைச்சு மாதமொன்றுக்கு இரண்டு கோடியே 20 லட்ச ரூபா வாடகைக்கு இயங்கியுள்ளதாகவும் அதற்கான முற்பணம் பெருந்தொகையில் வழங்கப்பட்டிருப்பதாகவும் எந்த அடிப்படையில் அவ்வாறு தீர்மானங்கள் யாரால் எடுக்கப்பட்டன என்பது குறித்து ஜனாதிபதி செயலகம் ஆராய்வதாக தெரிகிறது.

ஏற்கனவே விவசாய அமைச்சு ராஜகிரியவில் இருந்த கூடுதல் வாடகை கட்டிடத்தில் இயங்கியமை குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு அந்த அமைச்சு பத்தரமுல்லையில் உள்ள அரச கட்டிடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.