Header Ads

சஜித்துக்கு பொய்த் தகவல்களை வழங்கும் நபர்

சஜித்துக்கு பொய்த் தகவல்களை வழங்கும் நெருக்கமான யாரோ ஒருவர் இருப்பதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன கூறியுள்ளார்.


நேற்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கருத்து வௌியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இது அரச தலைவர் ஒருவர் அல்லது எதிர்க்கட்சித் தலைவர் ஒருவருக்கு தகுதியான செயற்பாடு அல்ல என்றும் அவர் கூறினார்.
 
உலக சந்தையில் எரிபொருள் விலையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியின் நன்மையை அரசாங்கம் மக்களுக்கு வழங்குவதில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கூறியுள்ளதாகவும், இதுபோன்ற பொய்யான தகவல்களை யாரோ ஒருவர் அவருக்கு வழங்கிக் கொண்டிருப்பதாகவும் பந்துல குணவர்தன கூறியுள்ளார்.
Powered by Blogger.