பொதுத் தேர்தலில் பொதுஜன பெரமுனவுக்கு 130 ஆசனங்கள் - பசிலுக்கு கிடைத்துள்ள புதிய அறிக்கை
எதிர்வரும் பொதுத் தேர்தலில் பொதுஜன பெரமுனவுக்கு 130 -135 இற்கு இடைப்பட்ட ஆசனங்கள் கிடைக்கும் என்று புதிய கருத்துக் கணிப்பு ஒன்று கூறியுள்ளது.
இது தொடர்பான அறிக்கை புதன்கிழமை பசில் ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேநேரம் தேர்தலின் போது மேலும் பலப்படுத்தப்பட வேண்டிய சில இடங்களும் இந்தக் கருத்துக் கணிப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வௌியிட்டுள்ளது.

Post a Comment