Header Ads

முன்கூட்டியே தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ளதன் நோக்கம் இதுவா?

உரிய தினத்திற்கு முன்னர் பாராளுமன்றை கலைப்பதற்கு அரசாங்கம் தயாராவதாக தகவல் வௌியாகியுள்ளதாகவும், அவ்வாறு பாராளுமன்றை கலைப்பதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.


ஜா-எல பகுதியில் நேற்று (08) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு எதிர்க்கட்சித் தலைவர் இதனை தெரிவித்திருந்தார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்க முடியாமை காரணமாகவா புத்தாண்டுக்கு முன்னதாக தேர்தலை நடாத்த தயாராகின்றீர்கள் என கேள்வி எழுப்பினார்.

அதேபோல், ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். உரிய காலத்திற்கு முன்பே பாராளுமன்றை கலைக்க வேண்டும் என்றால் மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதன்போது தெரிவித்தார்.
Powered by Blogger.