ஜனாதிபதியின் நடவடிக்கையால் 41 ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களுக்கு ஏற்படப் போகும் பரிதாபம்
பாராளுமன்றத்தின் உத்தியோகபூர்வ காலம் நிறைவடைவதற்குள் ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, மார்ச் 02ம் திகதி பாராளுமன்றம் கலைக்கப்பட்டால் 66 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் இல்லாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது.
அதன்படி ஐக்கிய தேசிய முன்னணியின் 41 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்காமல் போகின்றது.
அதேநேரம் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் 10 உறுப்பினர்கள், தமிழ் தேசிய கூட்டமைப்பின் 08 உறுப்பினர்கள் மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் ஒரு உறுப்பினருக்கும் ஓய்வூதியம் இல்லாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது.

Post a Comment