சஜித் இன்னும் இரகசியம் காக்கும் விடயம்
அடுத்த பொதுத் தேர்தலில் எந்த மாவட்டத்தில் போட்டியிடுவது என்பது குறித்து இதுவரை முடிவு செய்யவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
பல மாவட்டங்களில் உள்ள UNP ஆதரவாளர்களிடமிருந்து தனக்கு கோரிக்கைகள் வந்துள்ளதாகவும், மகா நாயக்க தேரர்களின் கோரிக்கைகளையும் கருத்தில் கொண்டு தேர்தலில் போட்டியிடும் மாவட்டத்தைப் பற்றி தீர்மானம் எடுக்கவுள்ளதாக சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் (21) அஸ்கிரி - மல்வத்து மாநாயக்க தேரர்களை சந்தித்த பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
எந்த மாவட்டத்தில் போட்டியிட்டாலும் வெற்றிக்குறித்து பிரச்சனை இல்லை எனவும், அதேபோல் நாட்டின் அனைத்து மக்களினதும் உரிமைக்காக முன்னிலையாகுவதாகவும், எதிர்க்கட்சி தலைவர் தெரிவித்துள்ளார். மக்களை வெற்றியடைய செய்யும் புதிய பார்வை மற்றும் புதிய வேலைத்திட்டத்துடன் தேர்தலில் போட்டியிடுவதாக அவர் வலியுறுத்தியுள்ளார்.
1994ம் ஆண்டு முதல் சஜித் பிரேமதாச ஹம்பாந்தோட்டையை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றத்திற்கு தேர்ந்தேடுக்கப்பட்டார். அடுத்த பொதுத்தேர்தலில் அவர் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டதுடன், பொதுஜன பெரமுன கூட்டணியின் பிரதமர் வேட்பாளரான மஹிந்த ராஜபக்ஷ குருணாகல் மாவட்டத்தில் போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment