Header Ads

அமெரிக்காவில் இருந்து இன்று நாடு திரும்பிய பசில் தெரிவித்துள்ள கருத்து

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியும், ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியும் எவ்வாறு செயற்படும் என்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.


ஜனாதிபதி தேர்தலின் பின்னர் வெளிநாடு சென்றிருந்த பசில் ராஜபக்ஸ இன்று நாடு திரும்பிய நிலையில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போது இதனை குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் மார்ச் மாதம் நாடாளுமன்றம் கலைப்படும் என ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

ஆகவே புதிய ஆட்சியின் ஊடாக மக்களுக்கான சேவையை வழங்குவதற்கு தமது கட்சிக்கான முழு அதிகாரத்தையும் வழங்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கான நடவடிக்கையினையே தற்போது முன்னெடுத்து வருகின்றோம்.

ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி ஏனைய கட்சிகளுடன் கூட்டிணைந்து போட்டியிட்டு நாடாளுமன்றத்தின் பெரும்பான்மையை கைப்பற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

எனினும் எதிர்வரும் பொதுத்தேர்தலில் எந்த சின்னத்தில் போட்டியிடுவது குறித்த இறுதி தீர்மானம் இன்னும் எட்டப்படவில்லை எனவும் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
Powered by Blogger.