Header Ads

நாட்டை ஆட்சி செய்ய ரணில் பொறுத்தமற்றவர் - ஆனால் ஐக்கியத் தேசியக் கட்சிக்கு அவரே பொறுத்தமான தலைவர்

ஐக்கியத் தேசியக் கட்சி யானை, இதயமென சின்னங்களால் பிளவுப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, ஐ.தே.கவுக்கு ரணிலே பொறுத்தமான தலைவர் எனவும் தெரிவித்துள்ளது.


பத்தரமுல்ல – நெலும் மாவத்தையில் இன்று(17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே இராஜாங்க அமைச்சர் ரோஹித ஆபேகுணவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்து கருத்துரைத்த அவர், ஐ.தே.க சின்னங்களால் பிளவுப்பட்டுள்ளது. நாட்டை ஆட்சி செய்வதற்கு முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பொறுத்தமற்றவர். ஆனால் ஐக்கியத் தேசியக் கட்சிக்கு அவரே பொறுத்தமான தலைவர் எனவும் கூறினார்.
Powered by Blogger.