Header Ads

அரசாங்கத்தை தோற்கடிக்க எதிர்க்கட்சி வகுத்துள்ள திட்டம்

அரசினால் செலுத்தப்படவேண்டிய கொடுக்கல்களுக்கு தேவையான 367 பில்லியன் ரூபாவை பெற்றுக்கொள்ளவென பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ள விசேட நிதிப் பிரேரணையை தோற்கடிக்க எதிர்க்கட்சி தயாராகி வருவதாக அறியமுடிகின்றது.


எதிர்வரும் 20 ஆம் திகதி இந்தப் பிரேரணையை அரசு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளது .இது நிறைவேறும் பட்சத்தில் தேர்தல் காலத்தில் அரசுக்கு மறைமுக அரசியல் இலாபம் கிடைத்துவிடலாம் என்பதால் அதனை தோற்கடிக்க எதிர்க்கட்சி முயற்சி செய்வதாக தெரிகிறது.

குறைநிரப்பு பிரேரணை ஒன்றின் மூலம் ஏற்கனவே அரசு நிதியை பெற்றிருப்பதால் இந்த நிதிக்கு விசேட பிரேரணை ஒன்றின் மூலம் பாராளுமன்றத்தின் அங்கீகாரத்தினை பெற நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

பாராளுமன்றத்தில் இதனை தோற்கடிக்க மந்திரலோசனைகளை நடத்திவரும் பிரதான எதிர்க்கட்சி ,இது தொடர்பில் இதர கட்சிகளுடனும் ஆலோசனை நடத்தி வருகிறது.
Powered by Blogger.