Header Ads

பெண்கள் விபச்சார தொழில் செய்வது குற்றமல்ல - அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ள நீதவான்

வர்த்தக நோக்கமின்றி பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்துவது இந்த நாட்டு சட்டத்துக்கு அமைய குற்றமல்ல என்று கொழும்பு கோட்டை நீதவான் ரங்க திசாநாயக்க கூறியுள்ளார்.


அவ்வாறு கூறியன நீதவான், பொலிஸாரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட தாய்லாந்து பெண் ஒருவரை கடந்த 13ம் திகதி குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுவித்துள்ளார்.

வியாபார நோக்கில் பெண்களை விபச்சார துறையில் ஈடுபடுத்தி பணம் சம்பாதிக்கப்படுவது மாத்திரமே விபச்சார தொழிலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்ட முடியும் என்று கூறிய நீதவான், அவ்வாறில்லாமல் பெண்கள் விபச்சார தொழில் செய்து தமது வாழ்க்கையை கொண்டு செல்வார்களாயின் அதற்கு எதிராக இலங்கை சட்டப்படி வழக்குத் தாக்கல் செய்ய முடியாது என்று கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் விபச்சார விடுதி ஒன்று நடத்திச் செல்லப்படுமாயின் அதனை விபச்சார துறையை வர்த்தகமாக நடத்திச் சென்றதாக வழக்குத் தாக்கல் செய்ய முடியும் என்றும் நீதவான் கூறியுள்ளார்.
Powered by Blogger.